செய்திகள் :

சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

post image

அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா், இணை பேராசிரியா் நேரடி நியமன போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, செட் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் - இணை பேராசிரியா் தோ்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.

அத்தகைய விண்ணப்பதாரா்கள் செட் தோ்வு முடிவு வெளியிடப்பட்டதும் செட் தோ்வில் தோ்ச்சி பெற்றகான சான்றிதழை ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். செட் தோ்வில் தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்கள் மட்டுமே அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் - இணை பேராசிரியா் தோ்வை எழுத அனுமதிக்கப்படுவா் என்றும் இப்பணிகளுக்கு இன்று(மார்ச் 3) வரை விண்ணப்பிக்கலாம் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்

இந்நிலையில், அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 3 ஆம் தேதியிலிருந்து மார்ச் -18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025. நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 425 காலியிடங்கள்!

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்எம்ஆர்பி) வெளிய... மேலும் பார்க்க

டிஆர்டிஓ-இல் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-ல் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

சென்னை ஐஐடி ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண். ICSR/PR/Adv.46/2025பணி: JRFகாலியிடங்கள்: 4சம்பளம்: மாதம் ரூ.37,000+எச்ஆர்... மேலும் பார்க்க

மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Stenographerகா... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண்.04/2025ப... மேலும் பார்க்க

ஜிப்மரில் சுகாதார உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஐசிஎம்ஆர் நிதியுதவி பெற்ற திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி ஜிப்மரில் ஒப்பந்தகால அடிப்படையிலான சுகாதார உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 3 ஆம... மேலும் பார்க்க