வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 425 காலியிடங்கள்!
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மருந்தாளுநர் (Pharmacist)
மொத்த காலியிடங்கள்: 425
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,30,400
தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மருந்தியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து தமிழ்நாடு மருத்தியல் கவுன்சிலில் (பார்மசி) சான்றிதழை பதிவு செய்து, ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில் தமிழ்மொழித் தேர்வு ஒரு மணி நேரமும், கணினி வழியில் மருத்தியல் தேர்வு 2 மணி நேரமும் நடைபெறும். தேர்வுக்கான தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை இணைதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். தேர்வு நுழைவுச்சீட் அஞ்சல் மூலம் அனுப்பப்படாது. தேர்வு நுழைவுச்சீட் பதிவு செய்வதற்கான தகவல் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
மிஸ்பண்ணிடாதீங்க... பிஹெச்இஎல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, மற்ற அனைத்து இதர பிரிவினரும் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.3.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.