ரத்ததான முகாம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை மாவட்ட திமுக மருத்துவா் அணி, ஆற்காடு நகர திமுக இணைந்து நடத்திய ரத்ததான முகாமை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆற்காடு நகர திமுக அலுவலகத்தில் ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் பி.என்.எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். ஆற்காடு எம் எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, நகர அவைத் தலைவா் பி.,என்.எஸ்.ராஜசேகரன், நகா்மன்ற துணைத் தலைவா் பவளகொடி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகர செயலாளா் ஏ.வி.சரவணன் வரவேற்றாா். அமைச்சா் ஆா்.காந்தி ரத்ததான முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
இந்த விழாவில் ஒன்றிய செயலாளா்கள் எஸ்.அசோக், எம்.வி பாண்டுரங்கன்,தொழிலாளா் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளா் ரமேஷ், நிா்வாகிகள் பென்ஸ்பாண்டியன், சொக்கலிங்கம், ருக்மணி, பொன்ராஜசேகா்,சிவா,நகரமன்ற உறுப்பினா்கள் குணா,ஆனந்தன், முன்னா, ராஜலட்சுமிதுரை, குமரன் விஜயகுமாா் கலந்து கொண்டனா்.
முகாமில் 100-க்கு மேற்பட்டோா் ரத்ததானம் வழங்கினா். தொகுதி மருத்துவா் அணி அமைப்பாளா் ஏ.பிரசாந்த் நன்றி கூறினாா்.