தில்லியில் பிரசாரம் நிறைவு! மும்முனைப் போட்டியில் வெல்வது யார்?
நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது! விடியோ வைரல்!
ஜம்மு காஷ்மீரில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஜம்முவின் டோமானா காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள லாலே டா பாக் பகுதியிலுள்ள 21.5 மர்லா அளவிலான நிலம் தொடர்பாக ரேகா தேவி என்பவருக்கும் பிரிஜ் ராஜ் சிங் என்பவருக்கும் மத்தியில் தகராறு நடைபெற்றுள்ளது.
அந்த தகராறின்போது பிரிஜ் ராஜ் சிங் அவரது துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளார். இதனால், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: யமுனை நீரைக் குடியுங்கள், மருத்துவமனையில் சந்திக்கிறேன்: கேஜரிவாலுக்கு ராகுல் சவால்
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர் மீது ஆயுத சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளிகள் 2 பேர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய பிரிஜ் ராஜ் சிங் அந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளரான பிரிஜ் பூஷன் சிங் ஜம்வால் என்பவரது சகோதரர் எனக் கூறப்பட்டுள்ளது.