Seeman: "பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந...
பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!
பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 22 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர், அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர். கமலகண்ணன் செய்தியாளர்களுடன் பேசுகையில், “போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக வரும் பிப். 5 ஆம் தேதி போக்குவரத்துத் துறை செயலரை சந்திக்க இருக்கின்றோம்.
இதையும் படிக்க: தமிழகத்துக்கு 963 கி.மீ. 4 வழிச்சாலைகள்! புதிதாக 18 சுங்கச்சாவடிகள்!!
இதனையடுத்து, பிப். 20 ஆம் தேதிமுதல் எந்த நேரத்தில் வேண்டுமானலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைத் தவிர்த்து மற்றச் சங்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை நடத்தவுள்ளோம். கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, பணப்பலன் வழங்கப்படவில்லை” என்றார்.