Baby & Baby: "'இசை வள்ளல்' டைட்டில் எனக்கே ஓவாராதான் இருக்கு; ஆனா..." - டி.இமான் பளீச்
அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருக்கும் படம் பேபி & பேபி. பிப்ரவரி 14-ம் தேதி ரீலீஸ் ஆகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய இந்தப் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், ``இந்தப் படத்தில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் 'இசை வள்ளல்' டைட்டில் எனக்கே ஓவாராதான் இருக்கு. இது தயாரிப்பாளரோட பேரன்பால் நடந்தது. அதனால இதை சீரியஸா எடுத்துக்க வேண்டாம். பேபி & பேபி படம் தொடங்கும்போது என்ன மாதிரியான வேகம், பாஸிடிவிட்டி இருந்துச்சோ அது படம் முழுசா எடுத்து என் டேபளுக்கு வர வரைக்கு அப்படியே இருந்துச்சு.
குடும்பத்தோட பார்த்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற அருமையான படம். ரொம்ப பிஸியா இருக்குற இத்தனை நடிகர்களையும் ஒரே படத்துல கொண்டுவந்து நடிக்க வச்சது இளம் இயக்குநருக்கு ரொம்பப் பெரிய விஷயம். அதுக்காகவே இயக்குநருக்கு வாழ்த்துகள். யோகி பாபு, ஜெய் காமினேஷன்ல படம் ரொம்ப சூப்பரா வந்துருக்கு. யோகிபாபு வெறும் காமெடி நடிகரா மட்டும் படத்துக்கு வரல. அதையும் தாண்டி முக்கியமான ரோல்ல நடிச்சிருக்கார். அப்போ பார்த்த மாதிரி அப்படியே இருக்கிற எவர் கிரீன் ஜெய்க்கு வாழ்த்துகள். இந்தப் படம் அவருக்கு ரொம்ப முக்கியமான படமா அமையும்.
புது தயாரிப்பாளர் யுவராஜ் சார்... முதல்படம் எடுத்து முடிச்சிட்டீங்க. இதுவே உங்களுக்கு ரொம்ப பெரிய அனுபவத்தைக் கொடுத்துருக்கும். யார் நல்லவன்... நல்லவன் மாதிரி இருக்குற கெட்டவன் யார்... உண்மையாவே நல்லவன் யாருனு எல்லா தெளிவையும், அடுத்தடுத்த உங்கள் தயாரிப்புக்குப் போதுமான அனுபவத்தையும் இந்தப்படத் தயாரிப்பு கொடுத்திருக்கும்னு நம்புறேன்." என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய இந்தப் படத்தின் இயக்குநர் பிரதாப், ``இந்தக் கதையைத் தயாரிப்பாளர் யுவராஜ் சார்கிட்ட சொன்னப்போ அவருக்கு ரொம்பப் புடிச்சிருச்சு. அதுக்கப்புறம் இந்த கேரக்டருக்கு யார், யார போடலாம்னு பேசும்போது அவரே நிறைய நடிகர்களைச் சொன்னார். பட்ஜெட் அதிகமானதுக்கு அப்புறம்மும் அவர் பின்வாங்கவே இல்ல. இந்தப் படத்தோட சூட்டிங் அப்போ ரமலான் மாசம். இந்தப் படத்தோட ஹீரோ ஜெய் அப்போ நோன்பு இருந்தார்.
அப்போகூட அவர் எங்கேயும் சலிக்காம, நடிச்சி கொடுத்திருந்தார். அதுக்காகவே ரொம்ப பெரிய நன்றி. யோகிபாபு சார்... எல்லா வகையிலும் இந்தப் படத்துக்கு முக்கியமானவர். எல்லா நடிகர்களும் ரொம்ப பெரிய ஸ்பெஷலா சப்போர்ட் பண்ணாங்க. ஜெய்க்கு அம்மானு சொல்லும்போது நோ சொன்ன கீர்த்தனா மேடம், சத்தியராஜ் சாருக்கு ஜோடியா நடிக்கணும்னு சொன்னதும் ஒகே சொல்லிட்டாங்க. எங்களால எவ்வளவு முடியுமோ அந்த அளவு நல்ல படமா கொண்டுவர முயற்சி பண்ணிருக்கோம். இதுக்கப்புறம் இது மக்கள் கையில கொடுக்கிறோம்." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...