செய்திகள் :

ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

post image

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடிபெயர்ந்த லட்சக்கணக்கானவர்களை சொந்த நாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகின்றது.


இதையும் படிக்க : மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்! -டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது ஆகிய முக்கிய வாக்குறுதிகளை தோ்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் முன்வைத்தாா்.

இந்நிலையில், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது ரத்து உள்பட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 உத்தரவுகளில் 47-ஆவது அதிபராகப் பதவியேற்ற அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கையொப்பமிட்டாா்.

டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் சட்டவிரோத குடியேறிகளாகி உள்ளனா். இதில் இந்தியா்களின் எண்ணிக்கை 18,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்களை திரும்ப அனுப்பும் முடிவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை சி-17 ரக ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி செய்தியாளர்களுடன் பேசுகையில்,

”அமெரிக்க அரசு தனது எல்லையை பாதுகாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளது. குடியேற்றச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தி, சட்டவிரோதமாக குடியேறிவர்களை வெளியேற்றி வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ள சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

தமிழகத்துக்கு வந்துவிட்ட ஜிபிஎஸ் நோய்! புனேவில் மாவட்டம் முழுவதும் பரவியது!

கரோனா போல தமிழத்துக்கு வராது என்று கூறிக் கொண்டிருந்த ஜிபிஎஸ் நோய் பாதித்து திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன் மரணமடைந்திருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில், மாவட்டம் முழுவதும் அந்நோய் பரவியிருப... மேலும் பார்க்க

கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் எத்தனை பேர்? - மக்களவையில் அகிலேஷ் கேள்வி!

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 4 விவசாயிகள் தற்கொலை!

கர்நாடகத்தில் வங்கிக் கடன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நான்கு விவசாயிகள் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.கர்நாடக மாநிலம் ஹாசனில் பதிவான வழக்கில், சிறுநிதி நிறுவனத்தின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்துக்கு ரூ.1.61 லட்சம் அபராதம்! கதையல்ல நிஜம்!!

பெங்களூருவில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை கொலைக் குற்றவாளி போல காவல்துறையினர் தேடிக் கண்டுபிடித்து அவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.காரணம் வேறு ஒன்றுமில்லை.. அந்த வாகனத்தின் மீது ப... மேலும் பார்க்க

பாபா ராம்தேவுக்கு மீண்டும் பிடிவாரண்ட்!

போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட்டை கேரள நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.ப... மேலும் பார்க்க

பசுவைக் கடத்தினால் என்கவுன்ட்டர்: கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

பசுவைக் கடத்துவது தொடர்ந்தால், கடத்துபவர்களை நடுரோட்டில் சுட்டுக் கொல்ல உத்தரவிடுவேன் என்று கர்நாடக அமைச்சர் மங்கல் எஸ் வைத்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும், பசுக்களை பாதுகாக்கவும், பசுக்களின் உரிம... மேலும் பார்க்க