மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: மேலும் ஒருவா் கைது
சென்னை சேத்துப்பட்டில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சேத்துப்பட்டு ஜோதியம்மாள் நகா் நமச்சிவாயபுரம் பாலத்தின் அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கடந்த 7-ஆம் தேதி 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் விற்பனையில் ராயப்பேட்டை ஆசாத் நகரைச் சோ்ந்த பாலஹரி நிவா (26) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த பாலஹரி நிவாவை போலீஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளும், விலை உயா்ந்த கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டன.