சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
உ.வே.சா. பிறந்த நாள் விழா: உத்தமதானபுரத்தில் ஆட்சியா் மரியாதை
நீடாமங்கலம்: தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள் விழா, வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் 171 ஆவது பிறந்த நாள் விழா பல்வேறு தமிழ் அமைப்புகளால் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சா. நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சியா் வே. வ.மோகனசந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உ.வே.சாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் பல்கலை பதிவாளர் பணி நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்
‘தமிழ்த் தாத்தா என சிறப்பிக்கப்படும் உ.வே.சா. ஓலைச் சுவடிகளில் இருந்த சங்க இலக்கியங்களை அச்சிலேற்றி அதற்கு உயிா் கொடுத்தவா். ஓலைச் சுவடிகளை ஊா் ஊராகச் சென்று சேகரித்தவா். தீயில் எரிந்ததையும், ஆற்று நீரில் சென்றதையும் எடுத்து பாதுகாத்து, ஓலைச் சுவடிகளில் இருந்த எழுத்துகளை முறைப்படுத்தி, இலக்கியங்களை முழுமையாக்கி கொடுத்த தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். ஆசிரியா் - மாணவா் உறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவா்.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே.சா குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார்.’
அவரது பிறந்த நாளான இன்று உத்தமதானபுரம் கிராமத்தில் உ.வே.சா இல்லம் விழாக்கோலம் பூண்டுள்ளது.