மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி
திருமுல்லைவாயல் தனியார் ஆலையில் தீ விபத்து! அருகிலுள்ள பள்ளிக்கும் தீ பரவியது!
திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தனியார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் சுதர்சன் நகர் பகுதியில் வண்ணப்பூச்சுகளுக்கு பயன்படும் தின்னர் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது.
இன்று(வியாழக்கிழமை) காலை திடீரென ஆலையில் தீப்பற்றி எரிந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள தனியார் பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் தீயானது அருகில் இருந்த தனியார் பள்ளி வளாகத்திற்கும் பரவியது. மாணவர்களின் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பரபரப்பாக உள்ளது.