காஸ்டிங் அழைப்புகளா? தனுஷ் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!
நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக யாரையும் அழைக்கவில்லை என தனுஷின் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.
3 படத்தின் மூலம் தயாரிப்பாளரான தனுஷின் உண்ட்ர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மாரி, விசாரணை, வடசென்னை, இட்லி கடை, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்தை தனுஷின் நண்பர் ஷ்ரேயஸ் என்பவர் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், உண்டர்பார் பிலிம்ஸ் மூலம் ஷ்ரேயஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு செல்போன் எண்ணைப் பகிர்ந்து, ” இது எங்கள் அழைப்பு எண் அல்ல. உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் என் பெயரில் வரும் காஸ்டிங் அழைப்புகள் முற்றிலும் போலியானவை. என் புகைப்படம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது” என கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்ஷன் நிறுவனமும் காஸ்டிங் ஏஜெண்ட்களை நியமிக்கவில்லை என எச்சரிக்கை பதிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.