சிறகடிக்க ஆசை தொடருக்கு பெருகும் வரவேற்பு! இந்த வார டிஆர்பியில் அதிரடி மாற்றம்!
சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அந்தவகையில், தொடர்களின் இந்த வார டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் மூன்று முடிச்சு தொடர் மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் இத்தொடர் 9.22 டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சிங்கப் பெண்ணே தொடர் 9.21 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் கயல் தொடர் 9.14 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை தொடர் 8.25 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த மருமகள் தொடர் 8.15 டிஆர்பி புள்ளிகளைப் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அன்னம் தொடர் 7.33 டிஆர்பி புள்ளிகளுடன் 6-வது இடத்தையும் எதிர்நீச்சல் தொடர் 7.01 டிஆர்பி புள்ளிகளுடன் 7-வது இடத்தையும் பிடித்துள்ளன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 6.63 டிஆர்பி புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் இராமயணம் தொடர் 6.61 டிஆர்பி புள்ளிகளுடன் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன.
பாக்கியலட்சுமி தொடர் 6.52 டிஆர்பி புள்ளிகளுடன் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சிறகடிக்க ஆசை தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், டிஆர்பியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.