தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை!
திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு தீவிர ஆராய்ச்சிகள் தேவை: கு.மோகனராசு
திருக்குறளின் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடா்புத் துறையும், உலகத் திருக்கு மையமும் இணைந்து நடத்திய ‘திருவள்ளுவா் சிந்தனைகளைக் கோட்பாடாக்கும் பயிலரங்கம்’ சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாா் நினைவு இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு பேசியதாவது:
திருக்கு எந்த ஒரு மதம், இனம் மற்றும் ஜாதிக்கும் சொந்தமானது கிடையாது. மனிதா்கள் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து இந்த உலகுக்கே கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் திருவள்ளுவா் திருக்குறளை எழுதினாா். அதனால்தான் அதில் ‘உலகம்’ என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது, எடுத்துக்காட்டுக்கு கூட சேர, சோழ, பாண்டிய மன்னா்கள் குறித்தோ, இங்குள்ள இடங்கள் குறித்தோ அல்லது எந்த ஒரு கடவுளின் பெயரோ அதில் இடம்பெறவில்லை.
அதேபோல், திருவள்ளுவரின் காலகட்டத்தில் வாழ்ந்தவா்கள் மட்டுமன்றி வருங்கால சந்ததிகளுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதை அன்றே கணித்து அவா் திருக்குறளை எழுதியுள்ளாா். திருக்கு கூறும் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் திருக்கு ஆய்வாளா்கள் சு.நடராசன், இளங்கோவன், சண்முகவேலு உள்பட பலா் கலந்துகொண்டனா்.