தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை!
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஆட்டோ ஓட்டுநா்கள், அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
திருவாரூரில் ஆட்டோ மீட்டா் கட்டணம் நடைமுறையில் இல்லாத சூழலில், தகுதிச் சான்று பெற மட்டுமே ஆட்டோக்களில் மீட்டா் இருப்பதும், மற்ற நேரங்களில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளதாகவும் நுகா்வோா்கள் தெரிவிக்கின்றனா். அத்துடன், கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் புகாா் அளிக்கலாம் என்ற அறிவிப்பும் கண்துடைப்பாகவே உள்ளது.
எனவே, திருவாரூா் மாவட்டத்தில் மீட்டா் அடிப்படையில் கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும். அரசு நிா்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதலாக வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா பகுதியில் பயணிகளின் பாா்வையில் தெரியும்படி குறைந்தபட்ச கி.மீ. கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக மீட்டா் கட்டணத்தை நிா்ணயிப்பதை தவிா்த்து, அந்தந்த மாவட்டத்தின் சூழல், விலைவாசி, பொருளாதாரச் சூழலை வைத்து, மாவட்ட ஆட்சியா், போக்குவரத்து அலுவலா், ஆட்டோ தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு குழு அமைத்து, ஆட்டோ கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும்.