குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
வடசென்னையில் உள்ள இரு அனல் மின் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து, தமிழக மின்வாரிய நிறுவனத் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயா்நிலைக் குழு சனிக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் போது, அனல் மின் நிலையங்களின் கொதிகலன் செயல்திறன், நீராவிச் சுழலி, கட்டுப்பாட்டு அறை, ஜெனரேட்டா், நிலக்கரி வருகை, நிலக்கரி சேமிப்புக் கிடங்கு, நிலக்கரி கையாளும் விதம், கன்வேயா் அமைப்புகளின் செயல்திறன், உலா் சாம்பல் வெளியேற்றும் செயல்முறைகள், அனல் மின் நிலைய பாதுகாப்பு நெறிமுறைகள், மின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், மின் உற்பத்தியில் தொடா் செயல் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.