சுழல் - 2 டிரைலர்!
சுழல் - 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான இணையத் தொடரான சுழல் கடந்த 2022 ஜூன் 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.. இத்தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்தனர்.
தொடர்ந்து, இத்தொடரின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது, சுழல் - 2 இணையத் தொடர் வரும் பிப். 28 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிக்க: காஸ்டிங் அழைப்புகளா? தனுஷ் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!
இத்தொடரின் பிரதான கதாபாத்திரத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை கெளரி கிஷன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். இப்பாகத்தை இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கேஎம் இருவரும் இயக்கியுள்ளனர்.
சாம்பலூர் என்ற மலைக் கிராமத்தில் வசிக்கும் சிறுமி மாயமாகிறார். அவரை கண்டுபிடிக்க காவல் துறை ஆய்வாளராக வரும் கதிர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இதனை மையமாகக் கொண்டு கிரைம் திரில்லராக எடுக்கப்பட்டது சுழல் முதல் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.