செய்திகள் :

Champions Trophy: 29 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் ICC தொடர்; களமிறங்கும் டாப் 8 அணிகள்- முழு விவரம்

post image
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது.

1996 க்குப் பிறகு 29 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கிறது. பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.

IND VS PAK

இரு நாடுகளுக்கிடையேயான உறவை காரணம் காட்டி பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்தது. அங்கு செல்ல மறுத்ததால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் வகையில் ஐ.சி.சி ஏற்பாடு செய்திருக்கிறது. இன்று மதியம் 2.30 மணிக்கு கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி நாளை தனது முதல் போட்டியில் வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கடைசி லீக் போட்டியில் மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா, பாகிஸ்தான் - ICC

சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்க கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் மும்பையில் இருந்து துபாய் சென்றுள்ளனர். கடைசியாக 2017ல் நடந்த சாம்பியன் டிராபியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பார்க்கலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Mohammed Shami: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்... அகர்கார், ஜாகீர் கானை தனித்தனியே முந்திய ஷமி!

சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இரண்டு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியத... மேலும் பார்க்க

Champions Trophy: அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஹர்ஷித் ராணா - ரசிகர்கள் அதிருப்தி ஏன்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கான முதல் போட்டி தொடங்கியிருக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேர் கொண்ட அணி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் த... மேலும் பார்க்க

Champions Trophy: முதல் ஆட்டத்திலேயே காயம்... தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அதிரடி வீரர்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியே நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கும், முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50... மேலும் பார்க்க

CT: 2013 `Magic' தோனி ; 2017 `Unlucky' கோலி - என்ன செய்யப்போகிறார் ரோஹித்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தொடங்கியிருக்கிறது. கடைசியாக நடந்த இரண்டு சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியா பைனலுக்குச் சென்றிருந்தது. அதில், ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி. இதனா... மேலும் பார்க்க

BANvIND: கேட்ச்சை விட்ட ரோஹித்; ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்சர் படேல்!' - என்ன நடந்தது?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் அக்சர் படேல் ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு உண்டானது. கேப்டன் ரோஹித் சர்மா கேட்ச்சை ட்ராப... மேலும் பார்க்க

Dhoni: 'என் வழி.. தனி வழி' - மாஸாக பஞ்ச் டயலாக் பேசிய தோனி; வைரலாகும் வீடியோ

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித... மேலும் பார்க்க