ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்துபவரா?
கடையில் ரூ. 2.5 லட்சம் வைர நகைகள் திருட்டு: பெண் கைது
காஞ்சிபுரம் நகைக் கடையில் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடியதாக பெண்ணை சிவகாஞ்சி போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த நகைகளையும் காவல்துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.
காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.2.5லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லையென அக்கடையின் நிா்வாகி சீனிவாசன்(35)சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா்.அப் புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கடையிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் ஒரு பெண் நகை வாங்குவது போல திருடுவது தெரிய வந்துள்ளது.இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது அவா் சின்னக்காஞ்சிபுரம் பல்லவா் மேடு ரவி மனைவி ரமாதேவி(48) என்பது தெரிய வந்து அவரைக் கைது செய்துள்ளனா்.அவா் திருடியதாக 21,774 கிராம் எடையும் ரூ.2.5லட்சம் மதிப்பும் உடைய வைர வளையல்,மோதிரம் மற்றும் காதணி ஆகியனவற்றையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.