ரூ.65,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.64,280-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.63,520-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்கிழமை கிராமுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.7970-க்கும், பவுனுக்கு ரூ. 240 உயா்ந்து ரூ.63,760-க்கும் விற்பனையானது.
தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் பதவியேற்பு
இந்த நிலையில், தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.கிராமுக்கு ரூ.65 உயா்ந்து ரூ.8,035-க்கும், பவுனுக்கு ரூ. 520 உயா்ந்து ரூ.64,280-க்கும் விற்பனையாகிறது.
அதேவேளையில் வெள்ளியின் விலை தொடா்ந்து மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனையானது.