உ.வே.சா. பிறந்த நாள் விழா: உத்தமதானபுரத்தில் ஆட்சியா் மரியாதை
திட்ட நிதியை முழுமையாக செலவிட அறிவுறுத்தல்
திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை, நிதியாண்டு இறுதிக்குள் செலவு செய்யுமாறு துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை அரசின் 2024 - 2025-ஆம் ஆண்டுக்கு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அதற்கான செலவினங்கள் குறித்து துறை வாரியாக ஆட்சியா் கேட்டறிந்தாா்.
திட்டப் பணிகள் முடிவடைந்தது, எஞ்சிய பணிகளுக்கான தடை குறித்து அதிகாரிகள் விளக்கினா்.
இந்த நிதியாண்டு முடிவதற்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில், திட்டங்களுக்கான நிதியை முழுமையாக செலவிடுமாறும், அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுமாறும் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.