சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்காலில் கடையடைப்பு
காரைக்கால் : மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்காலில் இன்று(பிப். 18) கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
காரைக்கால் மீனவர்கள் சிலர் கடந்த 28-ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை கடற்படையினர் அதனைத்தொடர்ந்து அவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில், அவர்களை இந்தியா அழைத்துவரவும், கைது செய்யப்பட்டுள்ள பிற மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையில் திருப்தியில்லையெனக் கூறியும் காரைக்கால் மீனவர்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம், மோட்டார் சைக்கிள்களில் கண்டன ஊர்வலம், ரயில் மறியல் போன்ற போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(பிப். 18) கடையடைப்புப் போராட்டத்துக்கு மீனவர்கள் அழைப்பு விடுத்தனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பிற பகுதிகளிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. எனினும், அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், பிற வாகனங்கள் வழக்கம்போல இயங்குகின்றன.
இதையும் படிக்க :காரைக்கால் மீனவா்கள் ரயில் மறியல்