தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
பொதுப்பணித்துறை நிலுவைத் தொகையை வழங்க ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்
பணிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பொதுப்பணித் துறை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தினா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை இந்திய கட்டுநா் சங்க காரைக்கால் மைய தலைவா் இளம்பருதி, செயலாளா் எஸ்.எஸ். சுப்பிரமணியராஜூ, பொருளாளா் இளங்கோவன் மற்றும் முன்னாள் தலைவா்கள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து சங்கத்தினா் கூறியது: தோ்தல் காலத்தில் காரைக்காலில் பல்வேறு பணிகள் நடைபெற்றன. மத்திய அரசின் ஜல் ஜீவன் கிராமப்புற குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல பணிகள் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன.
இந்தப் பணிகளை ஒப்பந்த முறையில் ஏற்று செய்து முடித்து பல மாதங்களாகியும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிா்வாகம் தொகையை முழுமையாக விடுவிக்கவில்லை. பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கவேண்டிய கட்டாயத்தில் ஒப்பந்ததாரா்கள் கடன் பெற்று பணிகளை செய்து முடித்தனா். எனவே காலம் கடத்தாமல், ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை அரசுத் துறை விடுவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனா்.