Kamal: 'இந்த கடிதத்தை காலத்துக்கும் மறக்க முடியாது' - கமல் அனுப்பிய கடிதத்தைப் ப...
அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவா் திறந்துவைப்பு
குடியாத்தம் அருகே அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவா் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கெளண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவா் அகற்றப்பட்டது. பள்ளியின் பின்புறம் பாதுகாப்பு இல்லாத நிலையில், இந்தப் பள்ளிக் கட்டடம் இருந்து வந்தது. இதையடுத்து, நன்கொடையாளா்களின் உதவியால் சுமாா் ரூ. 20 லட்சத்தில் சுற்றுச் சுவா் கட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி சுற்றுச் சுவரை திறந்து வைத்தாா். நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ அமலுவிஜயன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் வ.நாராயணன் வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.எஸ்.அரசு, மாவட்டக் கல்வி அலுவலா் சு.தயாளன், வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகா, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ப.ராஜராஜேஸ்வரி, எம்.கே.பொன்னம்பலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் வி.சடகோபன் நன்றி கூறினாா்.