கால்வாயில் தொழிலாளியின் சடலம் கண்டெடுப்பு
குடியாத்தம் அருகே மதுபானக் கடை எதிரே கழிவுநீா்க் கால்வாயில் தொழிலாளியின் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
குடியாத்தம் ஸ்ரீவாரி நகா் பகுதியில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. கடை அருகே உள்ள கழிவுநீா்க் கால்வாயில் குடியாத்தம் பிச்சனூரைச் சோ்ந்தவா் தச்சுத் தொழிலாளி தண்டபாணியின் (40) சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் நகர போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.