செய்திகள் :

விரைவில் நியூசி. ஐசிசி கோப்பையை வெல்லும்: ரிக்கி பாண்டிங்

post image

ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியூசிலாந்து அணி விரைவில் கோப்பையை வெல்லும் எனக் கூறியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் 49ஆவது ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

7-ஆவது முறையாக நியூசிலாந்து ஐசிசி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

இந்த 7 போட்டிகளில் 2 முறை மட்டுமே நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஐசிசி ரிவிவ்யூவில் 3 உலகக் கோப்பைகளை வென்ற ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

சாம்பியன்ஸ் டிராபி - நியூசி.க்கு சிறப்பாகவே அமைந்தது

நியூசிலாந்தின் கிரிக்கெட் பயணம் எதுவும் தவறாக செய்யவில்லை. எனக்கு தெரிந்து மற்றுமொரு சிறப்பான ஐசிசி தொடராகவே நியூசி.க்கு சாம்பியன்ஸ் டிராபியும் அமைந்தது. அந்தத் தொடரை முழுவதும் அவர்கள் திறமையாகவே செயல்பட்டார்கள்.

நான் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னதாக உங்களிடம் கேட்டிருந்தால் நீங்கள் 4 அணிகளில் நியூசிலாந்தை சேர்த்திருப்பீர்கள். ஏனெனில் அந்த அணி அவ்வளவு நன்றாக விளையாடுகிறது.

நான் இந்தமுறை சொந்த மண்ணில் பாகிஸ்தான் வெல்லும் அல்லது தென்னாப்பிரிக்க அணி வெல்லும் என்றே நினைத்தேன். நியூசிலாந்து அங்கு இருக்காதே என்றே நினைத்தேன். ஆனால், நிச்சயமாக அவர்கள் வந்தார்கள்.

விரைவில் ஐசிசி கோப்பையை நியூசி. வெல்லும்

அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (362/6) என்ன மாதிரி ஒரு ஆதிக்கமான விளையாட்டை நியூசி. அணியினர் விளையாடினார்கள். அதுமாதிரி ஒருநாள் கிரிக்கெட்டை சிறப்பாக விளையாடவே முடியாது.

முதலில் பேட் செய்து 360 ரன்கள் எடுத்தார்கள். சாம்பியன்ஸ் டிராபியில் இதுதான் அதிகபட்ச ரன்கள் என நினைக்கிறேன்.

இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியும் நல்ல அணியே. அவர்கள் வெற்றிக்கு மிகவும் தூரமாக ஒன்றுமில்லை. இந்திய அணி 49 அல்லது 50ஆவது ஓவரில்தானே வென்றது. அவர்கள் பெரிதாக தவறிழைக்கவில்லை.

இறுதிப் போட்டியில் சில நட்சத்திர வீரர்களைவிட மற்ற்வர்கள் நன்றாகவே செயல்பட்டார்கள். அதிக விக்கெட்டுகள் எடுத்த மாட் ஹென்றி சரியாக இருந்திருந்தால் விளையாடியிருப்பார். அதனால், அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல தொடராகவே அமைந்தது. விரைவில் நியூசி. ஐசிசி கோப்பையை வெல்லும் என்றார்.

எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!

வங்கதேச வீரர் மஹ்மதுல்லா (39) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மஹ்மதுல்லா வங்கதேசத்தில் அதிகமாக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கிறார். அனைத்து ஐசிசி தொடர... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெறவேண்டும்?: ஏபிடி வில்லியர்ஸ்

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.டி20 உலகக் கோப்பை இந்திய அணி வென்றவுடன் ரோஹித், கோலி, ஜடேஜா ஓய்வை அறிவித்த... மேலும் பார்க்க

ராஜஸ்தானுடன் இணைந்தார் 13 வயது வீரர்! ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டவர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் மிக இளம் ஐபிஎல் வீரர் என்ற பெருமையை பெற்ற வைபவ் சூரியவன்ஷி இணைந்துள்ளார்.ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி வ... மேலும் பார்க்க

சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கா... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!

மே.இ.தீ. அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் தந்தையாக கருதப்படும் ஆண்டி ராபட்ஸ் ஐசிசியின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியமா... மேலும் பார்க்க