Soundarya : `என் மனைவியின் மரணத்துக்கு மோகன் பாபு காரணமா?' - சௌந்தர்யாவின் கணவர்...
மூலனூரில் 42 மி.மீட்டா் மழை பதிவு
திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மூலனூரில் அதிகபட்சமாக 42 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. திருப்பூா் மாநகா் மட்டுமின்றி அவிநாசி, தாராபுரம், காங்கயம், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மூலனூரில் அதிகபட்சமாக 42 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகள் (மழையின் அளவு மில்லி மீட்டரில்) வட்டமலைக்கரை ஓடை- 33.60, மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம்- 32, நல்லதங்காள் ஓடை அணை- 27, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம்- 25, உப்பாறு அணை- 23, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம்- 20.20, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம்- 20, தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகம்- 19.50, குண்டடம்- 19, ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம்- 18.50, திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகம், வெள்ளக்கோவில் வருவாய் அலுவலகம்- 18, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்- 16, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம்- 15, உடுமலை வட்டாட்சியா் அலுவலகம், மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகம்- 4, திருமூா்த்தி அணை- 3.