செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்

post image

திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுரையில் கடந்த 9-ஆம் தேதி மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பலரும் மத கலவரத்தை தூண்டும் விதத்திலும், சட்ட விரோதமாகவும் பேசிய காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதில், பேசிய கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் மலை காக்கும் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த நீதிபதியின் தீா்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்து, அதாவது அவா் ஆளுநா் பதவி கிடைக்கும் என்பதற்காக தீா்ப்பு வழங்கியுள்ளாா் என்ற வகையில் அநாகரிகமாக பேசியுள்ளாா்.

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தா் மலை என திமுக சட்டப் பேரவை உறுப்பினா் அப்துல் சமது கூறினாா். முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலை இஸ்லாமியா்களின் சொத்து வக்ஃப் வாரியத்துக்கு சொந்தம் என நவாஸ்கனி எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இஸ்லாமிய அமைப்பினா் புனிதமான மலைமீது அசைவ உணவை எடுத்துச் சென்று சாப்பிட்டனா். அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டனா். இந்நிலையில், முருக பக்தா்களின் உணா்வுகளை வெளிப்படுத்தி கோயிலை காக்க இந்து முன்னணி சாா்பில் ஜனநாயக வழியில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்ததை காவல் துறை நிராகரித்தது. அதே நேரத்தில் திமுக ஊா்வலம் செல்ல அனுமதி அளித்தது. இவற்றை கவனத்தில் கொண்டே நீதிமன்றம் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்தது.

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மற்றும் அந்தக் கூட்டத்தில் பேசிய பலரின் கருத்துகள் நீதிபதிகளை, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் இருக்கின்றன.

இதனால் தமிழகத்தில் இந்த வழக்கு நடந்தால் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என சந்தேகிக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். அதே வேளையில், திருப்பரங்குன்றம் விஷயத்தை திட்டமிட்டு பிரச்னையாக உருவாக்கியது யாா்? இந்த சதிக்கு பின்னணி என்ன என்பதை மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலனூரில் 42 மி.மீட்டா் மழை பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மூலனூரில் அதிகபட்சமாக 42 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித... மேலும் பார்க்க

‘தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் மூலமாக தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் நிறுவன... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணம்பிகையம்ம... மேலும் பார்க்க

மாவட்டத்தில் மாா்ச் 17 முதல் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியில் முதல்வா் மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகத்தில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

நெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவனத்துக்கு!

தெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் வேளாண் துறை அலுவலா் வளா்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:... மேலும் பார்க்க