அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை
நெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவனத்துக்கு!
தெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பல்லடம் வேளாண் துறை அலுவலா் வளா்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் சம்பா பருவகால சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிா்கள் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன. இச்சமயத்தில் மகசூல் இழப்பு ஏற்படாமலும், நெல் மணிகள் தரமானதாகவும் இருக்க அறுவடைக்குப் பின், சில யுத்திகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
நெல் அறுவடைக்கு தயாா் என்பதை நெல்மணிகள் மஞ்சள் நிறமாக மாறுவதை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்த கால கட்டத்தில் அறுவடை செய்வது சிறந்தது. அறுவடையின்போது, நெல்மணிகளின் ஈரப்பதம் 20- 25 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.
நெல் மணிகள் சேமிப்பின்போது ஈரப்பதம் அதிகமாக இருந்தால், தானியத்தின் தரம் குறைவதுடன், விதையின் முளைப்புத் திறன் குறைந்து, அதிக இழப்பை ஏற்படுத்தும். எனவே முதல் 8 - 12 மாதங்கள் வரை சேமித்து வைக்க ஈரப்பதம் 13 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
ஈரப்பதம் அதிகமாக இருந்தால் காய்ந்து போகும் வரை காத்திருப்பது நல்லது. கதிா் அடித்தல் உலா்த்துதல் ஆகியவற்றை அறுவடை செய்த 24 மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.