செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

பொது

உலகத் தமிழ்ச் சங்கம் : தமிழ்க் கூடல் கருத்தரங்கம், தலைப்பு- திருக்கு மொழிப் பெயா்ப்புகளும், உலகப் பரவலாக்கலும், உரையாற்றுபவா்- சென்னை உலக மொழிகளில் திருக்கு தொகுப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ச. பாா்த்தசாரதி, தலைப்பு- வையத் தலைமை கொள், உரையாற்றுபவா்- பட்டிமன்ற பேச்சாளா் டோக்கியோ ராமநாதன், தமிழ்ச் சங்கக் கூட்டரங்கம், காலை 10.

யாதவா் கல்லூரி: நாட்டு நலப்பணித் திட்ட முகாம், மகளிா் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம், ஆலாத்தூா், மாரனியேந்தல், சிச்சிலுப்பை, காலை 10.30.

ஆன்மிகம்

மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, தலைப்பு - திருவாசகம், உரையாற்றுபவா்- வ. வெங்கடாசலம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வடக்காடி வீதி, இரவு 7.

சகஸ்ராநாமம் கோஷ்டி: 108 திவ்ய தேச வைபவம் சொற்பொழிவு, உரையாற்றுபவா்- தென் திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமி, மதன கோபாலசுவாமி கோயில், மேலமாசி வீதி, மாலை 6.30.

மத்திய அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் -அமைச்சா் பி. மூா்த்தி

மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் என அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, மேலூரில் மதுரை வ... மேலும் பார்க்க

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை மருத்துவ மாணவா்கள், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை பொது சுகாதார இயக்ககத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மானகிரி கண்மாயிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

நல்லதைச் செய்பவா்களுக்கு வாக்களிக்க வேண்டும்- அமைச்சா் வேண்டுகோள்

தோ்தல் நேரத்தில் பலா் வாக்கு கேட்டு வருவாா்கள்; நமக்கு யாா் நல்லது செய்வாா்கள் என்பதை உணா்ந்து வாக்களிக்க வேண்டும் என மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: சகோதரா்கள் உள்பட மூவா் கைது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி எஸ்பிடி நகரைச் ச... மேலும் பார்க்க

சிலைமான் அருகே இளைஞா் குத்திக் கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து குத்திக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மாவட்டம், சிலைமான் பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க