ராஜஸ்தானுடன் இணைந்தார் 13 வயது வீரர்! ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டவர்!
மத்திய அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் -அமைச்சா் பி. மூா்த்தி
மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் என அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, மேலூரில் மதுரை வடக்கு மாவட்டதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேலூா் நகா்மன்றத் தலைவரும், நகர திமுக செயலருமான முகமதுயாசின் தலைமை வகித்தாா். இதில் பதிவுத் துறை, வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்துக்கான நிதி பகிா்விலும், தொகுதி மறுசீரமைப்பிலும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக ஆளும் வடமாநிலங்களில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைகளை திமுக ஒருபோதும் ஏற்காது. மேலும் திட்டமிட்ட குடும்ப நலம் என்ற மத்திய அரசின் திட்டத்தை தமிழகம் சிறப்பாக நடைமுறைப்படுத்தியது. ஆனால் வடமாநிலங்கள் அந்தத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. இந்தப் பிரச்னையில் மத்திய பாஜக அரசு சூழ்ச்சி வலைவிரித்து தமிழகத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்காமல் நாடகமாடுகிறது.
இதுபோன்ற ஓரவஞ்சனை செயல்களை திமுக, கூட்டணி கட்சிகளின் துணையுடன் முறியடிக்கும் என்றாா் அவா்.
இதில், தலைமைக் கழக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி, சிறைசெல்வன், நிா்வாகிகள் க. கொன்னடியான், கொட்டாம்பட்டி ராஜராஜன், மேலூா் செல்வராஜ், கிடாரிப்பட்டி சேகா், துரை மகேந்திரன், பி. பழனி, வி. காா்த்திகேயன், ஆா். பாலகிருஷ்ணன், எஸ். கிருஷ்ணமூா்த்தி, ஆா். குமரன், சோழவந்தான் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.