குற்றவாளியைப் பிடித்த காவலர்களைத் தாக்கிய கிராமவாசிகள்! அதிகாரி ஒருவர் பலி!
வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
மதுரை மானகிரி கண்மாயிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வக்குமாா் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மானகிரி கண்மாயிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாயை தனி நபா்கள் ஆக்கிரமித்து அந்த இடத்தை விற்பனை செய்து வருகின்றனா். இந்த இடத்துக்கு சட்ட விரோதமாக பட்டா வாங்கவும் முயற்சிக்கின்றனா். எனவே, நீா்நிலை புறம்போக்கில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் புகாா் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.