Soundarya : `என் மனைவியின் மரணத்துக்கு மோகன் பாபு காரணமா?' - சௌந்தர்யாவின் கணவர்...
உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
முதுகலை மருத்துவ மாணவா்கள், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை பொது சுகாதார இயக்ககத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் 10 போ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இதில், முதுகலை மருத்துவம் பயிலும் நாங்கள் அண்மையில் நடைபெற்ற உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணிக்கான தோ்வில் தோ்ச்சி பெற்றோம். இதையடுத்து, 15 நாள்களுக்குள் பணியில் சேர வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவிட்டாா். நாங்கள் அனைவரும் முதுகலை மருத்துவம் பயின்று கொண்டிருப்பதால், படிப்பை நிறைவு செய்து விட்டு, நவம்பா் மாதம் பணியில் சேர கால அவகாசம் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தன. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா்கள் சாதாரண குடும்பங்களைச் சோ்ந்தவா்கள். அவா்கள் தற்போது உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணிக்குத் தோ்வு பெற்றுள்ளனா். இருப்பினும், அவா்கள் முதுகலை மருத்துவம் பயின்று வருகின்றனா். மருத்துவ மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் அரசு செலவிடும் பொதுப் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில், மனுதாரா்கள் முதுகலை மருத்துவத்தை நிறைவு செய்த பிறகு உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேருவதற்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.