வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி
'சுடு நீரினை மட்டும் குடித்து வந்துள்ளார்' - Youtube பார்த்து டயட்; 18 வயது பெண் உயிரிழந்த பரிதாபம்!
கேரள மாநிலம், கண்ணூர் அடுத்த கூத்துபரம்பாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா. 18 வயது இளம்பெண்ணான ஸ்ரீ நந்தா அதிக அளவில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது எடை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ நந்தா, உணவு உட்கொள்வதையே முற்றிலும் தவிர்த்துள்ளார்.

இவை குறித்து ஸ்ரீ நந்தாவின் குடும்பத்தினர், "கடந்த ஆறு மாதங்களாகவே அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்காக யூ டியூப் பார்த்து உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்திருக்கிறார். இதை தனது குடும்பத்தினரிடம் மறைத்திருக்கிறார்.
பல மாதங்களாக தனது பெற்றோர் கொடுத்த உணவு ஏதும் உட்கொள்ளாமல் அந்த யூ டியூபில் சொன்னபடி சுடுநீரினை மட்டும் குடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பலகட்ட உடல் பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் ஸ்ரீநந்தாவின் பெற்றோர்களிடம் அவருக்கு போதுமான உணவு வழங்குமாறு அறிவுறுத்தினார்கள். மேலும் அவரை மனநல நிபுணரிடம் அழைத்துச்செல்லுமாறும் கூறினார்'' என்கிறார்கள். இரண்டு வாரத்திற்கு முன்பு ஸ்ரீநந்தாவின் உடல் மிகவும் பாதிக்கப்பட்டு ரத்தத்தின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தது. மேலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரை அருகில் உள்ள தலச்சேரி கார்ப்பரேட்டிவ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ஸ்ரீ நந்தாவை பரிசோதித்த மருத்துவர் நாகேஷ் மனோகர் பிரபு , "சரியாக 12 நாட்களுக்கு முன்னால் உடல்நிலை பிரச்னையால் அவசர சிகிச்சைப் பிரிவில் ஶ்ரீநந்தா அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதிக்கையில் அதிர்ந்து போனோம். ஏனெனில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது. மேலும் அவர் ஏற்கெனவே படுத்தப்படுக்கையாக இருந்ததும் தெரிய வந்தது. அவரது உடலில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை காற்று பொருத்தப்பட்டது. ஆனாலும் அவரது உடல் சீராகவில்லை'' என வருத்தமுடன் கூறியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
