செய்திகள் :

ட்ரம்ப் வாங்கிய Tesla Model S : ஒரு சார்ஜில் 659 KM; டாப் ஸ்பீடு 209; Full Automatic- என்ன ஸ்பெஷல்?

post image

தன் நண்பர் எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவின் கார் விற்பனைகள் குறைய... அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிய... அவருக்கு உதவ வேண்டும் என்று லேட்டஸ்டாக டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபராக இருப்பவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கார் ஓட்டக்கூடாது. அதனால், "இந்தக் கார் வெள்ளை மாளிகையிலேயே இருக்கும். இதை என் பணியாளர்கள் இயக்குவார்கள்" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

டெஸ்லா மாடல் எஸ்...

'டெஸ்லா மாடல் எஸ்'

தற்போது வெள்ளை மாளிகையில் நிற்கும் அந்த கார் 'டெஸ்லா மாடல் எஸ்' ஆகும். இந்தக் காரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோமா...

டெஸ்லா என்றாலே எலெக்ட்ரிக் கார். ஆக, இந்த காரும் எலெக்ட்ரிக் கார் தான். ஒரு மணிநேரத்திற்கு 130 மைல்கள் என்பது இந்தக் காரின் டாப் ஸ்பீட். அதாவது 209 கிலோ மீட்டர்\மணிநேரம்

பேசேஞ்சர்கள் மற்றும் எந்த கார்கோவும் இல்லாத டெஸ்லா மாடல் எஸ் காரின் மொத்த எடை 4,560 lbs. கிட்டதட்ட 2,000 கிலோ.

இந்த கார் ஃபுல் பேட்டரியில் 410 மைல் செல்லும் திறன் கொண்டது. அதவாது 659 KM. இந்த காரின் இன்ஜினால் உச்சபட்மாக 670 hp தரமுடியும்.

இந்தக் காரின் அகலம்...

இந்தக் காரின் அகலம்...

'ஃபுல்லி கம்ப்யூட்டரைஸ்டு'

காரின் இந்த அம்சங்களை தாண்டி, ஆடியோ குவாலிட்டி பக்கம் வந்தால், 960 வாட் ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ளது மாடல் எஸ் கார். இதில் பாட்டு கேக்கும்போது நாம் ஸ்டூடியோவில் இருப்பதுப்போலவே தோன்றுமாம்.

இந்த காரின் பின் சீட்டை மடக்கினால் ஒரு பெரிய சைக்கிளை அழகாக எந்த சிக்கலும் இல்லாமல் காருக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியும்.

அதிபர் ட்ரம்ப் காரில் ஏறியதும் 'ஃபுல்லி கம்ப்யூட்டரைஸ்டு' என்று ஆச்சரியப்பட்டார். ஆம், இந்தக் கார் முழுக்க முழுக்க கணினி மயமானது தான்.

'நாம் எங்கு செல்கிறோம்?' என்பதை மட்டும் இந்தக் காரில் உள்ள மேப்பில் போட்டுவிட்டால் போதும், அதுவே நம்மை அலுங்காமல் குலுங்காமல் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடும்.

சாலையில் போகிறோம் முன்னே எதாவது வண்டி சென்றுக்கொண்டிருக்கிறது... பின்னே எதாவது வண்டி வந்துக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கேற்ப காரே லேனை (Lane) மாற்றிக்கொள்ளும்.

காரை பார்க் செய்ய வேண்டுமானால், அந்தப் பார்க்கிங்கில் எங்கு இடம் காலியாக இருக்கிறதோ, அந்த இடத்திற்கு தானாக சென்று தன்னை பார்க் செய்துக்கொள்ளும்.

நாம் எங்காவது காரை நிறுத்தியிருந்தாலும், அதன் 'கீ' நம்மிடம் இருந்தால் போதும், அதுவே தானாக நம்மிடம் வந்து சேர்ந்துவிடும்.

இந்த காரின் விலை கிட்டதட்ட 80,000 அமெரிக்க டாலர்கள் ,அதாவது சுமார் 70 லட்சம்.

இந்தக் காரை நீங்கள் வாங்குவீர்களா, அப்படி வாங்கினால் இந்தக் காரின் எந்த feature-காக வாங்குவீர்கள் என்று கமெண்ட் செய்யுங்கள்!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

இனி பார்க்கிங் வசதியும் இருந்தால்தான் கார் வாங்க முடியும்; சென்னையில் வரப்போகுது புது சட்டம்

கடந்த மார்ச் 13 அன்று சென்னை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட புதிய பார்க்கிங் திட்டத்தில் இனி சென்னையில் கார் வாங்குபவர்கள் ஆவணங்களுடன் தங்களிடம் காரைபார்க் செய்யும் இடவசதியும்இருக்கிறது என்பத... மேலும் பார்க்க

Best 7 Seater Cars: இந்தியாவின் முக்கியமான 13 பெஸ்ட் 7-சீட்டர் கார்கள் இவைதான்; வின்னர் யார், ஏன்?

குடும்பத்தில் டூர் அடிக்க 7 சீட்டர்தான் சரியான சாய்ஸ். 7 சீட்டர் கார்களில் பெரிய குறையாகச் சொல்லப்படுவது - குறைவான டிக்கி இடவசதியும், சும்மா பேருக்கு இருக்கும் 3-வது வரிசை சீட்களும்தான்.அப்புறம் என்ன... மேலும் பார்க்க

Porsche: தமனுக்கு பாலகிருஷ்ணா கொடுத்த 2 கோடி ரூபாய் கார்; இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?

தமிழில் மட்டுமல்ல; தெலுங்கிலும் இப்படித்தான் சந்தோஷத்தைக் கொண்டாடுகிறார்கள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள். லேட்டஸ்ட்டாக வெளிவந்து, 5 நாட்களில் 115 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்த ‛டாக்கு மஹா... மேலும் பார்க்க