சீமான் வீட்டு காவலாளி, உதவியாளருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் !
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உதவியாளர் அமல்ராஜ், பாதுகாவலர் சுபாகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சீமான் வீட்டில் காவல்துறை ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், சீமான் வீட்டு பணியாளர் சுபாகர் மற்றும் வீட்டுக் காவலாளி அமல்ராஜ் ஆகியோருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விராலிமலை பட்டமரத்தான் கோயில் ஜல்லிக்கட்டு: சம்பிரதாயமாக கோயில் காளை அவிழ்க்கப்பட்டது
இதையடுத்து, சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், போலீஸாரை தாக்கியதாகவும் இரு வெவ்வேறு வழக்குகள் பதியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் உதவியாளர் அமல்ராஜ், பாதுகாவலர் சுபாகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை இரண்டு பேரும் பூக்கடை காவல் நிலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.