எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு: ராமதாஸ் கண்டனம்
பனிப்பொழிவு: விராலிமலையில் மலைப்பிரதேசம் போல் காட்சியளித்த வயல்வெளிகள்!
விராலிமலை: விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு ஊா்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பனிப்பொழிவால் குடியிருப்புப் பகுதியில் அருகருகே உள்ள வீடுகள் கூட வெண்புகை போா்த்திய மலைப்பிரதேசம் போல் காட்சியளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தேசிய நெடுஞ்சாலை, இனாம் குளத்தூா் சாலை, இலுப்பூா் மேட்டுச்சாலை, மேலப்பட்டி, ராமேசுவரம் செல்லும் புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால், குடியிருப்புப் பகுதியில் அருகருகே உள்ள வீடுகள் கூட கண்களுக்கு புலப்படாத வண்ணம் இருந்தது.
பருவநிலை மாற்றத்தால் 50% பேருக்கு சிறுநீரக செயலிழப்பு
பொதுவாக மார்கழி, தை மாதங்களில் அதிகாலை அதிக பனிப்பொழிவு இருக்கும். ஆனால், மாசி மாதத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்பது எதிர்பாராது ஒன்று. இதனால்,பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு விடிந்து நீண்ட நேரம் ஆன பின்பு தான் வெளியில் வரும் சூழல் விராலிமலையில் நிலவியது.
பட்டமரத்தான் குளம், அம்மன் குளம் உள்ளிட்ட விராலிமலை சுற்றுப்பகுதி வயல் வெளிகள் மினி காஷ்மீர் போன்று காட்சியளித்தது... புற்கள் மீது பனிப்படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்து.
குடியிருப்புப் பகுதியில் அருகருகே உள்ள வீடுகள் கூட கண்களுக்கு புலப்படாத வண்ணம் இருந்தது. விராலிமலை மக்களுக்கு இது புது அனுபவத்தை கொடுத்தது.
மேலும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, விராலிமலை, ராமேசுவரம் செல்லும் புறவழிச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் பனிமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊா்ந்து சென்றன.