தமிழக பட்ஜெட்: 100 இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு!
தமிழக பட்ஜெட் நாளை மறுநாள்(மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் நிகழ்வை மக்கள் அதிகமாக கூடும் சென்னை மெரீனா கடற்கரை, சென்னை சென்ட்ரல் ரயில் உள்ளிட்ட 100 இடங்களில் எல்இடி திரை அமைத்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாா்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், முன்பண மானியக் கோரிக்கைகள், கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையும் படிக்க: சென்னை: உணவகத்தின் லிஃப்ட் அறுந்து ஊழியர் பலி
மேலும், வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதியை ஆய்வுக் குழுவே இறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.