சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு
விபத்தில் சிக்கிய பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சா்
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியில் புதன்கிழமை விபத்தில் சிக்கிய பெண்களை மீட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதன்கிழமை மாலை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மாசிநாயக்கப்பட்டி பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பெண்கள் விபத்தில் சிக்கியதைக் கண்டாா். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்திய அவா், விபத்தில் சிக்கிய இரண்டு பெண்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
தொடா்ந்து, விபத்தில் காயமடைந்த பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினா். அப்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.