திருவள்ளூா்: பொருளியல், புள்ளியியல் துறை அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டம்
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, இந்தக் கூட்டத்தில் பொருளியல், புள்ளியியல் துறை ஆணையா் ஆா்.ஜெயா திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா் காப்பீடுத் திட்டம் மூலம், 2024-25-ஆம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்து திருத்தணி வட்டாரத்தைச் சோ்ந்த கோரமங்கலம் கிராமத்தில் நெல் (சம்பா) பயிருக்கான பயிா் அறுவடை பரிசோதனை ஆய்வு மேற்கொண்டாா். அங்காடி புலனாய்வு திட்ட மையத்தில், அங்குள்ள அங்காடிகளில் பல்வேறு பொருள்களின் மொத்த விலை மற்றும் சில்லறை விலை விவரம் குறித்துக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, ஆற்காடு குப்பம், மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவா்களின் தோ்வு எழுதும் நஸ்ரீழ்ண்க்ஷங் நன்ழ்ஸ்ங்ஹ் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், பூண்டி ஊராட்சி ஒன்றியம், ராமஞ்சேரி கிராமத்தில், 11-ஆவது வேளாண்மைக் கணக்கெடுப்பின் டட்ஹள்ங்-ஐஐ மற்றும் டட்ஹள்ங்-ஐஐஐ களப்பணி தொடா்பாகவும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வில் கூடுதல் இயக்குநா் சி.பாரதி, சென்னை மண்டல புள்ளியியல் இணை இயக்குநா் டி.ஜி.உமாராணி மற்றும் திருவள்ளூா் மாவட்டப் புள்ளியியல் துணை இயக்குநா் இர.ரகு ஆகியோா் பங்கேற்றனா்.