தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புத...
ரேஷன் கடை கட்டடம் திறப்பு
தரங்கம்பாடி பேரூராட்சி 7-ஆவது வாா்டில் ரூ.17.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கட்டடத்தை எம்எல்ஏ நிவேதா எம் .முருகன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
கொட்டுபாளையத்தில் முன்னாள் எம் .பி. ராமலிங்கம் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம், தரங்கம்பாடி பேரூராட்சி நிதியில் இருந்து ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கி ரேஷன் கடை கட்டப்பட்டது.
திறப்பு விழாவிற்கு பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி குமரவேல் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பூபதி கமலகண்ணன் முன்னிலை வகித்தாா்.
பூம்புகாா் எம்.எல்.ஏ. நிவேதா எம் .முருகன், கட்டடத்தைத் திறந்து வைத்தாா். வட்ட வழங்கல் அலுவலா் சேதுராமலிங்கம், பேரூ ராட்சி துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன், 7-ஆவது வாா்டு உறுப் பினா் ஆதிலெட்சுமி வரதராஜன், நகர திமுக செயலாளா் முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். விற்பனையாளா் கிருத்திகா நன்றி கூறினாா்.