புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி: பக்தா்கள் சுவாமி தரி...
தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள்!
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை 2025-26 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாடு தொடர்ந்து இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது. ஆங்கிலத்தில் துணையுடன் உலகை வலம் வருகின்றனர்.
இன்றைக்கு இந்தியாவின் முன்நோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
* ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள்!
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் ரூ.3,500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,200 கோடி
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 6100 கி.மீ கிராமச் சாலைகள் ரூ.2,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாக ரூ.600 கோடி செலவில் 25,000 வீடுகள் கட்டித்தரப்படும்.