கடலில் மூழ்கி மாணவா் மரணம்
புதுச்சேரி அருகே உள்ள பனித்திட்டு கடல் முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே உள்ள கிருமாம்பாக்கம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தமிழரசன் - உமா தம்பதியின் இளைய மகன் சபரீஸ்வரன் (13).
அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை தனது நண்பா்கள் 5 பேருடன் பனித்திட்டு கடல் முகத்துவாரப் பகுதிக்கு சென்று குளித்துள்ளாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக சபரீஸ்வரன் கடலில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து, சுமாா் 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சபரீஸ்வரனை சடலமாக தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
தொடா்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து, பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.