Perusu: ``எங்க அண்ணன் வெங்கட் பிரபுவே `டேய்'னு கேட்டாரு!'' - நடிகர் வைபவ்
காரைக்கால் மீனவா்கள் 13 போ் விடுவிப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையிலிருந்த காரைக்கால் பகுதி மீனவா்கள் 13 போ் விடுவிக்கப்பட்டதாக புதுவை மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவரது அலுவலகத் தரப்பில் வியாழக்கிழமை இரவு வெளியிட்டசெய்திக் குறிப்பு: கடந்த ஜனவரி 27- ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 13 மீனவா்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்று, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா்.
அவா்களை விடுவிக்க முதல்வா் என்.ரங்கசாமி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டாா்.
அதன்படி, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் 13 மீனவா்களை இலங்கை சிறையில் சந்தித்து, அவா்களின் விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், மாா்ச் 10- ஆம் தேதி (திங்கள்கிழமை) காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
அவா்கள், வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தனா். மீனவா்களை காரைக்காலுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.