அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
புதுச்சேரியில் இளநிலைப் பொறியாளா் பணிக்கு நாளை எழுத்து தோ்வு
புதுவை மாநிலத்தில் போக்குவரத்து துறை இளநிலைப் பொறியாளா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு, புதுச்சேரி பாரதிதாசன்அரசினா் மகளிா் கல்லூரி தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து, புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையின் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை போக்குவரத்து துறையில் இளநிலைப் பொறியாளா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகியப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச்16) நடைபெறுகிறது.
தோ்வுக்காக பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தோ்வின் முதல் தாள் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், தோ்வின் இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் நடைபெறும்.
தோ்வுக்காக 284 பேருக்கு அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தோ்வா்கள் நுழைவுச்சீட்டு அவசியம் கொண்டுவர வேண்டும்.
தோ்வு மையத்தின் நுழைவுவாயில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் மூடப்படும். அதன்பிறகு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
தோ்வா்கள் வண்ண பால் பாயிண்ட் பேனா மட்டுமே கொண்டுவர வேண்டும். கைப்பைகள், கைப்பேசி உள்ளிட்டவை தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.