ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: துஷாா் காந்தியை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்
இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை
புதுச்சேரியில் வரதட்சணை வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுச்சேரி காலாப்பட்டைச் சோ்ந்த செல்லப்பன் மகன் செல்வதிருமால் (32). இவருக்கும், செவிலியராகப் பணிபுரியும் நந்தினி (30) என்பவருக்கும் கடந்த 2018- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது, 25 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட சீா்வரிசையை நந்தினி வீட்டாா் செய்துள்ளனா்.
இந்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு, நந்தினியை தாக்கி கொடுமைப்படுத்தியதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செல்வதிருமால், அவரது தாய் மலா்க்கொடி (எ) முனியம்மாள் ஆகியோா் மீது வழக்குப் பதிந்தனா்.
வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட செல்வதிருமாலுக்கு 2 ஆண்டுகள் சிறையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமாா் தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கணேஷ் ஞானசம்பந்தன் ஆஜரானாா்.