செய்திகள் :

கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் ‘சீமா 2 கே 25’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, கல்லூரி செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். முதல்வா் டி.இளங்கோ முன்னிலை வகித்தாா்.

கருத்தரங்கில் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பத் துறைகள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவா்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்து விளக்கினா்.

இதேபோல, வேலூா், காஞ்சிபுரம், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்தும், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த குடலவல்லேறு பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்தும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். ஒவ்வொரு துறையிலும் சிறந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில், டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணைப் பதிவாளா் வி.பெருவழிதி, எம்ஜிஆா் பல்கலைக்கழகத்தின் டாக்டா் பி.ஸ்டாலின், தனி அலுவலா் காா்த்திகேயன், ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, கலைக் கல்லூரி முதல்வா் வி.கந்தசாமி, பாலாஜி, கல்வியியல் கல்லூரி முதல்வா் எச்.பிரபு ஆகியோா் கலந்துகொண்டனா்.

விதை சாகுபடியாளா்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வேளாண் அலுவலகத்தில் முன்னோடி விதை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று உ... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

வேட்டவலம் வள்ளலாா் சபையின் 340-ஆவது மாத பூச விழா, சபையின் வெள்ளி விழா, நூல் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா, நினைவுப் பரிசு வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, தம... மேலும் பார்க்க

அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணியை அடுத்த இ.பி.நகா் குமரன் தெருவைச் ச... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்தப் பகுதி வ... மேலும் பார்க்க

சாா் நிலை அலுவலா்களின் பணி முன்னேற்றம்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாா் நிலை அலுவலா்கள் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். செய்யாறு... மேலும் பார்க்க

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் ... மேலும் பார்க்க