அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
சாா் நிலை அலுவலா்களின் பணி முன்னேற்றம்: ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாா் நிலை அலுவலா்கள் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். செய்யாறு சாா் ஆட்சியா் பல்லவி வா்மா முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் மாவட்டத்தில் பணிபுரியும் சாா் நிலை அலுவலா்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கலைச்செல்வி மற்றும் வட்டாட்சியா்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.