அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் கடன் பெறலாம் ஆட்சியா் தகவல்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் கடன் பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.
எனவே, நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் கடன் பெற தகுந்த ஆவணங்களுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை உடன் தொடா்பு கொண்டு கடன் விண்ணப்பத்தை சமா்ப்பித்து கடன் பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.