Budget 2025-26: தொடங்கிய பட்ஜெட்; வெளிநடப்பு செய்த அதிமுக! - எடப்பாடி சொன்ன காரண...
வேதாரண்யம் கடலில் மாசி மக தீா்த்தவாரி
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, சந்திரசேகர சுவாமிக்கு வங்கக் கடலில் தீா்த்தவாரி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்கா் தியாகராஜசுவாமி, நடராஜசுவாமி பந்தல்காட்சி திருவிழாவில் எழுந்தருளினா்.
பகலில் நடராஜா் வீதியுலா நடைபெற்றது. மாலையில் சந்திரசேகர சுவாமி ரிஷபா ரூடராய் எழுந்தருளி, வேதநதி, மகோநதி என்னும் வங்கக் கடலில் (சந்நிதி கடல்) மக தீா்த்தவாரி இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தினா் செய்திருந்தனா்.