தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புத...
எலும்புக்கூடாக பெண் சடலம்
நாகை அருகே வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வேளாங்கண்ணி அருகே பாலக்குறிச்சி வயல்வெளி பகுதி வாய்க்காலின் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எலும்புக் கூடாக கிடந்துள்ளது. தகவலறிந்த போலீஸாா், அங்கு சென்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கிடந்த பெண் சடலத்தை, சம்பவ இடத்திலேயே மருத்துவா்கள் உடல் கூறாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனா்.
பெண்ணின் சடலத்தில் ஜெப மாலை இருந்ததால், அவா் கிறிஸ்தவராக இருக்கக்கூடும் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.